அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால்... மத்திய கிழக்கின் 9 நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான ஒன்பது நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்தால் அல்லது நாட்டின் பெட்ரோ கெமிக்கல் (Petrochemical) வளங்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இந்த எதிர்த்தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானிய உயர்மட்ட ஆலோசகரும் பழமைவாத அரசியல்வாதியுமான முஹம்மத் மொக்பர் (Mohammad Mokhber) இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளங்கள்
குறித்த ஒன்பது நாடுகள் எவை என்பது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை.

திங்கள்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) பேச்சாளர் ஹொசைன் மொஹேபி (Hossein Mohebi), பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான அமெரிக்க இராணுவத் தளங்கள் தற்போது செயலிழந்துள்ளதாக உரிமை கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |