தாக்குதல்களை உடன் நிறுத்துக! இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் ஒரு பெரிய பூகம்பத்தை சந்திக்கக்கூடும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அடுத்த கட்ட போருக்கான குறிப்பாக பெரிய அளவிலான நில வழி தாக்குதலுக்கு பட்டாலியன்கள் மற்றும் இராணுவப் படைகள் தயார்படுத்தப்படுகின்றன" என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ள நிலையில், காசா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தாக்குதல்களை உடன் நிறுத்துக
லெபனானின் ஹிஸ்புல்லா உடன் மோதினால், மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளுக்கும் போர் விரிவடையும்.
அப்படி நடந்ததால் இஸ்ரேல் ஒரு பெரிய பூகம்பத்தை சந்திக்கக்கூடும் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற தனது அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நாவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலின் அறிவிப்பு அபாயகரமானது; மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.