தாக்குதலின் முடிவு உங்கள் கைகளில் இல்லை! அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
புதிய இணைப்பு
அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஈரானின் அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாக குறித்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று (28) ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் இப்ராஹிம் அஸிஸி (Ebrahim Azizi) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், "நாங்கள் உங்களை எச்சரித்தோம்!, இப்போது நீங்கள் ஒரு பாதையில் செல்லத் தொடங்கிவிட்டீர்கள், அதன் முடிவு இனி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
We warned you!
— ابراهیم عزیزی (@Ebrahimazizi33) February 28, 2026
Now you have started down a path which end is no longer in your control.
ஈரானிய அதிகாரி தெரிவிப்பு
அத்துடன் அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராகி வருவதாகவும், எதிர் தாக்குதல்கள் அழிக்கத்தக்கதாகவும் இருக்கும் என ஈரானிய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதுவரை, ஈரானிய தலைநகர் தெஹ்ரானின் குறித்த பகுதிகளை இஸ்ரேலிய தாக்குதல்கள் குறிவைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
BREAKING: An Iranian official has told the Reuters news agency that Tehran is preparing for a response to US-Israeli attacks, and the counterattacks are set to be crushing.
— Al Jazeera English (@AJEnglish) February 28, 2026
🔴 Follow our LIVE updates: https://t.co/45PLIHYlB5 pic.twitter.com/LGVeO2jI2U
அந்த வகையில் ஈரானின் புலனாய்வு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, ஈரானின் அணுசக்தி அமைப்பு மற்றும் பார்சின் இராணுவ வளாகம் என்பன இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |