தாக்கினால் பேரழிவு : ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் 3 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் தாக்கி தகர்த்து உள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பான காணொளியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டு உள்ளது. இந்தநிலையில் ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அவர் தனது எச்சரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும்
அமெரிக்க கடற்படைக் கப்பல்களை ஈரான் தாக்கினால் அந்நாட்டின் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்து மூழ்கடிக்கும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அமெரிக்க கடற்படையை நோக்கிச் சுடாமல் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது என்றார்.
“Let the message to the IRGC be clear: If you shoot at two of our ships, we will impose an even higher economic cost —taking out three of yours. We will not hesitate to defend American forces, and if necessary, destroy Iran’s limited and exposed oil fleet.” — Adm. Brad Cooper,… pic.twitter.com/UGGcSGsUtd
— U.S. Central Command (@CENTCOM) September 5, 2026
அதேபோல் அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கினால் ஈரான் அதிக பொருளாதார இழப்பைச் சந்திக்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |