தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: முதிர்ந்த பெண் பரிதாப பலி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதூவ உப கட்டுப்பாட்டு நிலைய எல்லைக்கு அருகில் இடம்பெற்ற கோர வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (21.10.2026) மாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 93.6 கிலோமீற்றர் மைல்கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மத்தள நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால், அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த லொறியின் பின்புறத்தில் வேன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை
விபத்தில் படுகாயமடைந்த வேன் சாரதியும், அதன் முன் இடது இருக்கையில் பயணித்த சாரதியின் தாயாரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலை உப கட்டுப்பாட்டு நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |