கட்டாரில் மழைபோல் வந்து விழும் ஈரானின் ஏவுகணைகள் : ஈழத்தமிழரின் நேரடி அனுபவம்
எந்த நிமிடமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற உலகின் எதிர்பார்ப்பு இன்று காலைவேளை நடந்தேறிவிட்டது.அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அந்த தாக்குதலை தொடங்கி விட்டன.
இவ்வாறு தாக்குதல் தொடங்கியதால் மத்தியகிழக்கு பிராந்தியமே அதிர்ந்த வண்ணமுள்ளன. ஒருபுறம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை நடத்தும் அதேவேளை ஈரானும் வளைகுடா பகுதியில் உள்ள கட்டார்,ஐக்கிய இராச்சியம் ,ஓமான் மற்றும் ஜோர்தான் நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இவ்வாறு ஈரான் நடத்தும் ஏவுகணை தாக்குதல்கள் மழைபோல் வந்து விழுந்ததாக கட்டாரில் உள்ள ஈழத்தமிழர் ஒருவர் தனது நேரடி அனுபவத்தை விபரித்துள்ளார்.
எனினும் ஈரானின் ஏவுகணை தாக்குதலை தாம் முறியடித்துவிட்டதாக கட்டார் தெரிவித்திருந்தது.
ஆனால் அவ்வாறு அறிவித்த நிலையிலும் ஈரானிலிருந்து வந்த ஏவுகணைகளை அங்கு பணிபுரியும் ஈழத்தமிழர் ஒருவர் நேரடியாக காணொளி எடுத்து அனுப்பிய பதிவுகள் உட்பட பல விடயங்களை தாங்கி வருகிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |