அமெரிக்க முற்றுகைக்கு ஈரானிய கடற்கண்ணிகளின் அபாயம்
இலங்கையில் நீண்டகாலமாக தமிழ்- சிங்கள இனமுரண்பாடு நிலவினாலும் இரண்டு இனங்களுக்கும் இடையில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சித்திரைப்புத்தாண்டு பிறந்துவிட்டது இன்றைய புத்தாண்டு பண்டிகையை மையப்படுத்தி மக்களுக்கு வளமான வாழ்வு பெருகட்டும் என்ற வகையில் அரசியல்வாதிகளின் முத்தாய்ப்பு வாழ்த்துச்செய்திகள் வந்திருந்தன.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் மின்சாரக்கட்டண உயர்வுகளுடன் இலங்கையர்கள் சித்திரைப்புத்தாண்டை கடப்பதற்கு சிலமணிநேரங்களுக்கு முன்னர் தான் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையும் ஆரம்பித்திருந்தது.
இந்த முற்றுகை எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்பது தெரியவில்லை. உலகப் பொருளாதாரத்திற்கு கடந்த மார்ச் மாதத்தை விட இந்த மாதம் மோசமானது என்ற எச்சரிக்கைகள் வந்துள்ளன.
5,000 க்கும் மேற்பட்ட கடற்கண்ணிவெடிகள் விதைக்கபட்டுள்ளதாக கூறப்படும் ஒருகடற்பரப்பில் நின்று ஈரானிய துறைமுகங்களுக்கான முற்றுகையை அமெரிக்கா எப்படித் தொடரும் என்பதில் தெளிவில்லை.
அதேபோல ஈரானிய துறைமுகங்களை முடக்க முயற்சிக்கும் அமெரிக்ககப்பல்கள் கடலடிக்கு அனுப்பப்படும் என பதிலுக்கு சூளுரைக்கும் ஈரானும் அமெரிக்காவுடன் அது இரண்டாம் கட்ட நேரடிப் பேச்சுக்களுக்கு அவசரப்படுவது அதன் சவால் நிலைகளையும் வெளிப்படுத்தும நிலையில் இந்த பின்னணிகளை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |