ஈராக்கில் பற்றி எரியும் அமெரிக்காவின் Victoria base
ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் விக்டோரியா பேஸ் எனும் தளபாட மையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் வானத்தை முட்டும் அளவிற்கு எழுந்த கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரிந்தது.
ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான அஷாப் அல்-கஹ்ஃப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில் தாக்குதல் நடந்ததால், பாக்தாத் விமான நிலையத்தின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கக் குடிமக்களை உடன் வெளியேற உத்தரவு
நிலைமை மோசமடைந்து வருவதால், ஈராக்கில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
🚨 Breaking: 🇮🇷 🇺🇸
— Global war update (@GlobalUpdate_) March 21, 2026
Major Fire breaks out at the American 'Victoria base' at Baghdad airport in Iraq, as per report.🚀💥 pic.twitter.com/qz0LPyhuGq
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான நேரடி மோதல் தொடங்கியதிலிருந்து, ஈராக்கில் உள்ள அமெரிக்கச் சொத்துக்கள் மற்றும் இராணுவ நிலைகளை ஈரான் ஆதரவு குழுக்கள் குறிவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |