இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கிய தளத்தை இலக்கு வைத்த ஈரான்! ஆத்திரத்தில் பிரித்தானியா
இந்து சமுத்திரத்தில் டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்கா - பிரித்தானியா கூட்டு இராணுவ தளத்தை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை பிரித்தானியா கடுமையாக கண்டித்துள்ளது.
ஈரான் இரண்டு இடைநிலைக் தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அந்த தளத்தை நோக்கி ஏவியது. எனினும், அவற்றில் எதுவும் இலக்கைத் தாக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொறுப்பற்ற தாக்குதல்கள்
இந்தத் தளம் ஈரானிலிருந்து சுமார் 3,800 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதுடன், நீண்ட தூர அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களை தரையிறக்கக் கூடிய விமானத் தளத்தையும் கொண்டுள்ளது.

இந்த நிலையில், ஈரான் குறித்த தளத்தை நோக்கி தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அவற்றை “பொறுப்பற்ற தாக்குதல்கள்” என பிரித்தானியா கண்டித்துள்ளது.
முக்கிய முன்னேற்றம்
ஈரானின் அரைஅதிகாரப்பூர்வமான செய்திநிறுவனம் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி, டியாகோ கார்சியாவில் உள்ள அடக்குமுறையாளர்களின் இராணுவத் தளம் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதல் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் வசதிகளை மேற்கு ஆசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளிலும் அச்சுறுத்தும் முக்கிய முன்னேற்றம் என ஈரான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |