பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
பரீட்சைகள் திணைக்களத்தின் தகவல் வளங்களைப் பாதுகாப்பதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திணைக்களத்தின் மின்னஞ்சல் ஊடாக முக்கியமான தகவல்களைப் பரிமாறும்போது தரவு மறையாக்க (Encryption) முறைகள் பயன்படுத்தப்படவில்லை எனவும், மின்னஞ்சல் வடிகட்டுதல் செயற்படுத்தப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரஸ் அச்சுறுத்தல்
மேலும், சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள், வைரஸ் அச்சுறுத்தல்கள், அனுமதியற்ற அணுகல்கள், கோப்புகள் மாற்றியமைக்கப்படுதல் அல்லது சைபர் பாதுகாப்புக் கொள்கை மீறல்கள் தொடர்பில் தகவல் அதிகாரிக்கு அறிவிக்குமாறு ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புகள் குறித்தும் திணைக்கள அதிகாரிகளுக்கு முறையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |