இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை...! பறந்த கோரிக்கை

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Aug 12, 2026 07:56 AM GMT
Report

இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த வழக்கு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷ விதான உத்தரவிட்டுள்ளார்.

சுமார் ஒன்பது மாதங்களாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், காவல்துறையினர் சமர்ப்பித்த விடயங்களைப் பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியலில்

கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியலில்

விசாரணை

நேபாளத்திற்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குறித்த சந்தேகநபரிடம், கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றையும் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை...! பறந்த கோரிக்கை | Court Rejects Ccd Request Forensic Facial Examin

மேலும், குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட விதம், அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏனைய சந்தேகநபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பான மேலதிக அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் திட்டமிடப்பட்ட காலப்பகுதி, பணம் பரிமாறப்பட்ட விதம் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் விதம் தொடர்பான தகவல்களையும் காவல்துறையினர் நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

சட்ட விரோத வாகன இறக்குமதி! யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை

சட்ட விரோத வாகன இறக்குமதி! யோஷித ராஜபக்சவிடம் CID இரண்டு மணிநேர விசாரணை

சிறப்பு முகப் பரிசோதனை

மேலும் விசாரணைகள் தொடர வேண்டியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு குற்றப் பிரிவு, சந்தேகநபரின் முகத்தை CCTV காட்சிகளுடன் ஒப்பிடும் நோக்கில் சிறப்பு முகப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, அவரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்ப அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை...! பறந்த கோரிக்கை | Court Rejects Ccd Request Forensic Facial Examin

இதற்கமைய, எதிர்வரும் 17ஆம் திகதி சந்தேகநபரை அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த தீர்ப்பு விரைவில்: நிறைவடைந்த 245 நாள் சாட்சிய விசாரணை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் அடுத்த தீர்ப்பு விரைவில்: நிறைவடைந்த 245 நாள் சாட்சிய விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016