கோட்டாவின் முன்னாள் செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியலில்
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சுகீஸ்வர பண்டார சற்று முன்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
கடந்த ஜூலை மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று (12) வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இன்று இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கோட்டாபய ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |