தோணி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் பலி
Puttalam
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
புத்தளம் - கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் உள்ள களப்பு ஒன்றில் பயணித்த தோணி கவிழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 7 வயது சிறுமி மற்றும் அவரது 15 வயது சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மீன்பிடி வலைகளை மீள எடுப்பதற்றாக குறித்த சிறுவர்கள் தங்கள் தந்தையுடன் தோணியில் சென்று கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
நீரில் மூழ்கிய நிலையிலிருந்த அவர்களின் தந்தை மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி