ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப்
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானம் மூலம் வெளியேறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தின்போதே இந்த இரகசிய பயணம் இடம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
இரகசிய பயணத்தில் டொனால்ட் டிரம்ப்
'அமெரிக்காவின் இரகசிய சேவை மற்றும் இராணுவம் தான் இந்த முடிவை எடுத்தார்கள். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்.

வெளியே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்கா பத்திரிக்கைகளில் பின்வருமாறு செய்தி வெளியாகியிருந்தன.
ஜூலை 8ஆம் திகதி ஊடகங்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் உணவு விநியோக வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத தனியார் ஜெட் விமானத்திற்குச் சென்று, அதில் இரகசியமாகப் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் ட்ரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே இருப்பதாக நம்பியிருந்த நிலையில், அவர் அந்த ஜெட் விமானத்தில் அங்காராவிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள விமானப்படைத் தளம் ஒன்றுக்குப் பறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |