A9 வீதியில் கோர விபத்து - லொறி உதவியாளர் சம்பவ இடத்திலேயே பலி
கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் லாரியின் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (12.08.2026) அதிகாலை கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏ 9 வீதியின் 155 ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
ஏ9 வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து பொருட்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்த வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த லொறி கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது பலமாக மோதியுள்ளது.

குறித்த விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதியின் உதவியாளர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து கிளிநொச்சி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |