ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசிய விமானத்தில் ஏறி ஐக்கிய இராச்சியத்திற்கு பறந்த ட்ரம்ப்
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் தாக்குதல் அச்சுறத்தல் காரணமாக துருக்கியில் இருந்து இரகசிய விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தி உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் துருக்கியிலிருந்து திரும்பும் பயணத்தின்போதே இந்த இரகசிய பயணம் இட்ம்பெற்றதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
இரகசிய பயணத்தில் டொனால்ட் டிரம்ப்
'அமெரிக்காவின் இரகசிய சேவை மற்றும் இராணுவம் தான் இந்த முடிவை எடுத்தார்கள். அவர்கள் என்னை வேறு விமானத்தில் செல்லச் சொன்னார்கள்.

வெளியே ஏதோ அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன். உண்மையில் நான் பயணம் செய்த விமானத்திற்குத்தான் அதிக ஆபத்து இருந்தது என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், அவர்கள் குறிவைக்க அதிக வாய்ப்புள்ள விமானம் அதுவாகத்தான் இருக்கும் என நான் கருதுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்கா பத்திரிக்கைகளை மேற்கோள்காட்டி வெளியாகிய செய்திகளில்
“ஊடகங்கள் முன்னிலையில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறிய பிறகு, ஜூலை 8 அன்று ட்ரம்ப் ஒரு உணவு வழங்கும் வாகனத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத ஜெட் விமானத்திற்கு ரகசியமாகச் சென்றார்.
செய்தியாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் அவர் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பதாக நம்பியிருந்த வேளையில், அவர் அந்த ஜெட் விமானத்தில் அங்காராவிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒரு தளத்திற்குப் பறந்தார்” என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |