போதிய வாய்ப்புகள் இருந்தும் ஷிரந்தியை தவறவிட்டது கட்டுநாயக்க: பிமல் வெளிப்படை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச வெளிநாடு சென்றது தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அமைச்சர் ரத்நாயக்க இதனைக் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியபோது அவரைக் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்துவதற்குப் போதிய வாய்ப்புகள் இருந்ததாகவும் அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
பழிவாங்கும் அரசியல் அல்ல
அரசாங்கம் ஒருபோதும் இத்தகைய தீய நோக்கங்களுடனான அல்லது பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்றும், அனைத்து நடவடிக்கைகளும் முறையான சட்டக் கட்டமைப்பு மற்றும் வழமையான நடைமுறைகளுக்கு இணங்கவே மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் விமல் ரத்நாயக்க கூறினார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் அவரை அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவது சாத்தியம் என்றும், அவர் சிங்கப்பூர் பிரஜை அல்ல என்பதால் அந்நாட்டிடமிருந்து அதற்கான அனுமதியைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அமைச்சர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |