அநுராதபுர பேரணியை விடவும் மற்றொரு பெரிய பேரணிக்கு தயாராகும் மொட்டுக்கட்சி
அனுராதபுரத்தில் பொதுஜன பெரமுன நடத்திய பேரணிக்கு இணையாக மற்றொரு பேரணியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சனக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் இலங்கை பொதுஜன பெரமுனவின் திட்டங்களைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கட்சி அலுவலகத்தில் ஊடகங்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சனக மேலும் கூறியதாவது,
தொகுதி அளவிலான கூட்டங்கள்
"எங்கள் கிளை அமைப்புகளை ஒழுங்கமைத்தல் மற்றும் தொடர்ச்சியான தொகுதி அளவிலான கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து இன்று நாங்கள் கலந்துரையாடினோம்.

அத்துடன், இந்நாட்டு மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, அனுராதபுரப் பேரணிக்கு நிகரான ஒரு பேரணியை நடத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
மேலும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எங்கள் தலைவர் நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழல் குறித்து விவாதிக்க, எங்கள் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் இன்று நாங்கள் ஒன்று திரட்டியுள்ளோம்.
நாட்டிற்கு அளித்த வாக்குறுதிகளில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
அரசாங்கத்திற்கு நாங்கள் இதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதன் மூலம் பொதுஜன பெரமுனவின் திட்டத்தைச் சீர்குலைக்கலாம் அல்லது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து தப்பிக்கலாம் என்று அவர்கள் கருதினால், அதை எமது கட்சி." என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |