அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி : சுட்டுவீழ்த்தப்பட்டது ஆளில்லா விமானம்
தெற்கு புஷேர் மாகாணத்தின் மீது பறந்த அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாகவும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படை தளம் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐ.ஆர்.ஜி.சி.) இன்று (10)புதன்கிழமை அதிகாலை உரிமை கோரியுள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள ஜஸ்க், சிரிக் மற்றும் கெஷ்ம் ஆகிய இடங்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட கடற்படை தளம் மீதான இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீதும் தாக்குதல்
சிரிக்கில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு கோபுரத்தை அமெரிக்கத் தாக்குதல்கள் சேதப்படுத்தியதாகவும், அந்நகரின் பமானி மாவட்டத்தில் இரண்டு தண்ணீர் தாங்கி தொட்டிகளை அழித்ததாகவும் அது கூறியது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைக்கு எதிராகத் தனது கடற்படை ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக ஐ.ஆர்.ஜி.சி. மேலும் தெரிவித்தது.
"மோதல்கள் தொடர்கின்றன," என்று அந்த அறிக்கை கூறியதுடன், தாக்குதல்கள் தொடர்ந்தால் "கடுமையான பதிலடிகள்" கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.
அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான "தற்காப்பு" தாக்குதல்கள் நிறைவடைந்ததாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.

முந்தைய ஒரு சம்பவத்தில் அமெரிக்க இராணுவத்தின் அப்பாச்சி உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராடர் தளங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக CENTCOM கூறியது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 8 மணி நேரம் முன்