பதவி விலக்கும் கஞ்சனவின் திட்டம் - பதிலடி கொடுத்த ஜனக ரத்நாயக்க!
மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்தமைக்காக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகவேண்டும் அவரை பதவி நீக்கவேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்து வருகின்றார்.
எனினும் தான் பதவிவிலகப்போவதில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பதவி நீக்கவேண்டும் என்ற யோசனைக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாட்டில் தற்போது உருவாகிவரும் சூழ்நிலையால் அரசியலில் ஈடுபடுவது குறித்து, நான் சிந்திக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
என்னைப் பதவி விலக்க முடியாது
பகுத்தறிவு அற்ற, கோட்டாபய ராஜபக்சவிற்கு கடந்த அதிபர் தேர்தல் காலத்தில் ஆதரவளித்தமைக்காக தற்போது நான் வருந்துகின்றேன்.
முட்டாள் அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரமும் தெரியாது கணக்கியலும் தெரியாது அவர்களிற்கு அரசியல் மாத்திரம் தான் தெரியும். புரிந்துகொள்ளாத அடிப்படை விடயங்கள் பல உள்ளன.
மின்சாரத் தேவை வீழ்ச்சி
இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கையில் மின்சாரத்திற்கான தேவை வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் இலங்கை மின்சாரசபைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
கட்டண அதிகரிப்பின் மூலம் தனது நட்டத்தை சரிசெய்வதற்கு முயலும் இலங்கை மின்சாரசபையின் முயற்சிகள் பாதிக்கப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
