சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : மோடியிடம் பகிரங்க கோரிக்கை!

Sri Lankan Tamils Jaffna Narendra Modi India
By Sathangani Apr 03, 2025 10:48 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த குறித்த அமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “2025 சித்திரை மாதம் மூன்றாம் திகதியாகிய இன்று, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் இயங்கும் சிவில் அமைப்புகளின் வலைப்பின்னலான வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஆகிய நாம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், இலங்கையின் நீண்டகால தேசியப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இந்திய அரசின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

சிக்குவாரா நாமல்..! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

சிக்குவாரா நாமல்..! சிஐடியினருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

இந்தியா வழங்கிய பங்களிப்பு

ஒரு நட்பான அயல் நாடு எனும் வகையில் இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்தியா எப்போதும் உதவிக்கு வருகிறது. 2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய மாபெரும் பங்களிப்பை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவிற் கொண்டுள்ளோம்.

அவ்வாறே, 1980களில் இலங்கையின் தேசியப் பிரச்சினையை திர்ப்பதற்கு நடுவராக இந்தியா ஆற்றிய வகிபாகத்தையும் நினைவிற் கொண்டுள்ளோம்.

சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : மோடியிடம் பகிரங்க கோரிக்கை! | Irrevocable Federal Power Sharing Request To Modi

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டமானது குறிப்பீட்ட சில உரிமைகளை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் உறுதிப்படுத்தியுள்ளது.குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மாகாண ஆட்சி வழங்கப்பட்டதுடன் தமிழ் மொழியானது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அலுவல்கள் மற்றும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

மேலும் மாகாண உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு மேன்முறையீட்டு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமானது, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதுமாகும்.

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

எகிறும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்...! அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

13வது திருத்தச் சட்டம்

எனினும், 13வது திருத்தச் சட்டமானது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த மக்களுக்கு இறையாண்மை உரிமைகளுடன் கூடிய நிலையான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவில்லை.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியானவர் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண ஆட்சியை செயலிழக்க செய்ய முடியும் என்பது இந்த மாகாண ஆட்சி முறைமையின் இன்னொரு மட்டுப்படுத்தலாகும்.

சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : மோடியிடம் பகிரங்க கோரிக்கை! | Irrevocable Federal Power Sharing Request To Modi

ஒரு தூரதிஷ்டவசமான நிகழ்வாக, இலங்கையின் உச்ச நீதிமன்றமானது 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பாவது "செல்லுபடியற்றதும் சட்டவிரோதமானதும்" எனப் பிரகடனப்படுத்தியது.

இது இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் அரசியல் பின்னடைவாகும். 13 வது திருத்த சட்டம் இலங்கையின் அரசியல் அமைப்பில் உளிவாங்கப்பட்டு 35 வருடங்கள் கடந்துவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று, 2009ஆம் ஆண்டு முடிவற்றது. போரின் போதும் போர் முடிவுற உடனடிக் கால கட்டத்திலும் பொது மக்கள் மீது பாரதூரமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பயிர்வை உறுதிப்படுத்தாததுடன் இராணுவ மயமாக்கலையும், சிங்கள் காலணித்துவத்தையும், பௌத்தமயமாக்கலையும் விரிவாக்கினர்.

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போதைப்பொருள் கடத்தியவருக்கு மரண தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல்

அத்துடன் தமிழ் பேசும் மக்களின் மொழியுரிமை மற்றும் கலாசார உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அரச அனுசரணையுடன் கூடிய பல்வேறுபட்ட அச்சுறுத்தல்களும் அந்துமீறல்களும் தொடர்கின்றன.

இந்த பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, கலாசார, பொருளாதார உரிமைகள் அரச கொள்கைகளாலும் நடைமுறைகளாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

சமஷ்டி அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் : மோடியிடம் பகிரங்க கோரிக்கை! | Irrevocable Federal Power Sharing Request To Modi

எமது கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களின் அடிப்படையில், 13வது திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரப் பகிர்வு முறையானது நிலைபேறானதல்ல எந்த நேரத்திலும் இலங்கை அரசானது மாகாண அதிகாரத்தை மீளப்பெற முடியும்.

எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த தமிழ் பேசும் மக்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முறையே எமக்கு கௌரமமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை உறுதிப்படுத்தக் கூடிய நிலைபேறான ஒரே முறைமை என்று திடமாக நம்புகிறோம்.

அந்தவகையில் தங்களுக்கு நல்வரவு கூறுவதுடன் இலங்கைக்கான தங்களின் உத்தியோகபூர்வ வருகையை நாம் உணர்வாக கௌரவிப்பதுடன், இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுந்த தங்களின் பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு இந்த பகிரங்க வேண்டுகோளை முன்வைக்கிறோம்“ என்று தெரிவித்துள்ளமை குறிபிடத்தக்கது.

வவுனியாவில் பல்கலையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மாணவர்கள் !

வவுனியாவில் பல்கலையில் புறக்கணிக்கப்படும் தமிழ் மாணவர்கள் !


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024