தான் அளித்த வாக்குறுதியை மீறுகிறாரா கோட்டாபய?
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெற்ற பிரசாரங்களின்போது கோட்டாபய வழங்கிய வாக்குறுதியை தற்போது மீறுகிறாரா என கொழும்பு ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல மாட்டேன் என்று கடந்த ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் பல தடவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி அளித்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ஆளும் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று வரும் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. வழமையாக இச்சந்திப்பு ஜனாதிபதி செயலகத்திலேயே நடைபெறும்.
ஆனால் இம்முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில் இக்கூட்டம் மிக காரசாரமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.