மகிந்தவின் வழியில் நகர்கிறாரா ஜனாதிபதி அநுர…!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் அரச நிர்வாகத்திற்குள் சிறிலங்கா படை அதிகாரிகளை நியமித்து ஆட்சியை கொண்டு சென்றது போல் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸ நாயக்கவும் செயற்படுகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்
இதன்படி கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, சிறிலங் இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையை, அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு சிறிலங் இராணுவ அதிகாரி
சபாநாயகர் தலைமையில் நேற்று(17) கூடிய அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்தில், இந்த பரிந்துரையை நிராகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இதற்கு முன்னர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரைத்தவர்களையும், அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.
படை அதிகாரிகளை அரச நிர்வாகத்திற்குள் கொண்டு வரும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்