கமலா ஹாரில் எந்த இனத்தவர் : ட்ரம்ப் கேள்வியால் வெடித்தது சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கறுப்பினத்தவரா இந்தியரா என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கறுப்பின பத்திரிகையாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஆசிய பின்னணியை மறைத்து வைத்திருந்தார்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், பல வருடங்களாக தனது ஆசிய பின்னணியை மறைத்து வைத்திருந்தார் என டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிலவருடங்களுக்கு முன்னர் அவர் கறுப்பாக மாறும்வரை அவர் கறுப்பினத்தவர் என்பது எனக்குதெரியாது என கூறிய டிரம்ப், அவர் தன்னை தற்போது கறுப்பினத்தவர் என கருதவேண்டும் என விரும்புகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
கறுப்பினத்தவரா இந்தியரா
இதன் காரணமாக அவர் கறுப்பினத்தவரா இந்தியரா என்பது தனக்கு தெரியாது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் கமலா ஹாரிஸ் தனது சட்டத்துறை வாழ்க்கையின் ஆரம்பத்தில் பரீட்சைகளில் தோல்வியடைந்தார் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்த உரிமையும் இல்லை
இதேவேளை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Karine Jean-Pierre, "ஒருவருக்கு அவர்கள் யார், எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பதைச் சொல்ல எந்த உரிமையும் இல்லை " என்றார்.
"கறுப்புத்தன்மையின் நடுவராக டொனால்ட் டிரம்பை நியமித்தது யார்" என்று நியுயோர்க்கின் பிரதிநிதி ரிச்சி டோரஸ் கேட்டார். அவர் டிரம்பை "இனவெறி கடந்த காலத்தின் நினைவுச்சின்னம்" என்று விவரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |