ரணிலின் ஊடகப்பேச்சாளரா விக்னேஸ்வரன் ..! சாணக்கியனுக்கு எழுந்த சந்தேகம்
Ranil Wickremesinghe
Shanakiyan Rasamanickam
C. V. Vigneswaran
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் அதிபர் ரணிலின் ஊடகப்பேச்சாளரா என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின்போதே அவர் இந்தக்கேள்வியை எழுப்பினார்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை

அத்துடன் அதிபர் ரணில் கூறியதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டாலும் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்போது காவல்துறை அதிகாரம் வழங்கப்படமாட்டாது என அதிபர் ரணில் கூறிய நிலையில் துப்பாக்கிகளற்ற கொட்டன் பொல்லுகளுடன் கூடிய காவல்துறை அதிகாரத்தை வழங்குமாறு விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி