கணேமுல்ல சஞ்சீவ கொலை : "வேலை முடிந்தது" தம்பிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய செவ்வந்தி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவைக் கொன்ற பிறகு, சந்தேக நபர் வழக்கறிஞர் வேடமணிந்த பெண், தனது சகோதரருக்கு "வேலை முடிந்தது" என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண், தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் காவல்துறையினர் அறிந்துள்ளனர்.
கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர்
இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த பெண் சந்தேக நபர்தான் என்ற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதேவேளை இன்று(25) காலை அவரது தாயும் இளைய சகோதரரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொலைக்கு துணைபுரிந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்