செவ்வந்திக்கு தங்குமிடம்! விசாரணையில் சிக்கிய கிளிநொச்சி நபர்
பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்திக்கு கிளிநொச்சி அம்பாள்குளம் தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னர் இந்தியாவிற்கு தப்பி செல்லும் நோக்கத்தில் இஷாரா கிளிநொச்சியிலும் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இஷாரா நேற்று தாம் தங்கியிருந்த இடங்களை விசாரணை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டிவரும் பின்னணியில் நேற்று கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
கணேமுல்ல சஞ்சீவ
இதன்படி கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதி வழங்கிய பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அனுமதி வழங்கிய நிலையில், சஞ்சீவ கொலைக்குப் பிறகு அவர் பல நாட்கள் மறைந்திருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆய்வு செய்ய அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் நேற்று ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
