நாடு தழுவிய தேடுதல் நடவடிக்கை : ஒரே நாளில் சிக்கிய 524 பேர்
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஊடாக நாடு முழுவதும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக காவல்துறையினரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 524 சந்தேகநபர்கள் நேற்று (23.01.2026) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள்
குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இந்தச் சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 429 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,706 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |