பற்றி எரியும் லெபனான் - இலங்கை பெண் காயம்

Israel Iran Lebanon Israel-Iran conflict
By Thulsi Apr 09, 2026 09:24 AM GMT
Report

புதிய இணைப்பு

லெபனான் மீது நேற்று (08) இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத்தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

குறித்த பெண் லேசான காயங்களுடன் தப்பியதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பெரும் தொடர் தாக்குதல்

லெபனான் மீது 10 நிமிடங்களுக்குள் இஸ்ரேல் நடத்திய பெரும் தொடர் தாக்குதல்களில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பற்றி எரியும் லெபனான் - இலங்கை பெண் காயம் | Israel Attack Lebanon Strait Of Hormuz Closed

மேலும்,1,165 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, "லெபனான் முழுவதும் இன்று அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவுகரமான மரணம் மற்றும் அழிவுகளால் நாங்கள் மிகுந்த சீற்றம் அடைந்துள்ளோம்" என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

லெபனான் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்தும் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

லெபனானில் போர் தொடங்கியதிலிருந்து நடந்ததிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த வான்வழித் தாக்குதல்கள், மத்திய கிழக்கில் அமைதியைக் காணும் நோக்கில் ஈரானுடன் 15 நாள் போர்நிறுத்தத்தையும் பேச்சுவார்த்தைகளையும் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே தொடங்கின.

இந்த போர்நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் புதிய அமைப்பு! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் புதிய அமைப்பு! விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

இறுதி ஊர்வலம் மீது தாக்குதல்

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடப்போவதாக தெஹ்ரான் புதன்கிழமை பிற்பகலில் அறிவித்தது.  


லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் தாக்குதல்களைக் கண்டித்ததோடு, சமீபத்திய தாக்குதல்கள் ஒரு "படுகொலைக்கு" சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல் பெரிய தாக்குதல்களில் ஒன்று சைடாவில் உள்ள ஒரு கஃபே மீது நடத்தப்பட்டது, இதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர்.

பால்பெக்கில், ஒரு இறுதி ஊர்வலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.  

ஈரான் போரில் பெருத்த ஏமாற்றம்! நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா

ஈரான் போரில் பெருத்த ஏமாற்றம்! நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா

கடுமையான தாக்குதல்

இந்நிலையில், இஸ்ரேல், (8) நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 254 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


குறித்த தாக்குல்களில் 1,100 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டிடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் 2 வார காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அப்பட்டமாக மீறப்பட்ட விதிகள்! முறியும் அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்

அப்பட்டமாக மீறப்பட்ட விதிகள்! முறியும் அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016