இஸ்ரேலின் பிடிவாதம் : உலக நாடுகள் அதிர்ச்சி
காசாவில் இஸ்ரேல் நடத்தும் மிலேச்சத்தனமான போர் காரணமாக இடம்பெயர்ந்த பலஸ்தீனமக்கள் ரபா நகரில் தங்கியிருக்கும் நிலையில் அங்கும் தரைவழி தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நகர் எகிப்தை ஒட்டி உள்ளது. இங்கு இலட்சக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர்.இந்த நகர் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தினால் அங்கு மனித பேரழிவு ஏற்படுமென உலகநாடுகள் எச்சரித்துள்ளன.
நெதன்யாகுவின் பிடிவாதம்
ஆனால் எதனையும் பொருட்படுத்தாத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரபா மீது தரைவழி தாக்குதலை நடத்தியே தீருவோமெனவும் ஹமாஸ் அமைப்பு அங்கு தங்கியுள்ளதால் இந்த தாக்குதல் அவசியமெனவும் காரணம் கூறுகிறார்.
10 லட்சம் பலஸ்தீன மக்களை
ரபா மீது தரைவழி தாக்குதலை நடத்தும்போது அங்கு தஞ்சமடைந்துள்ள 10 லட்சம் பலஸ்தீன மக்களை சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து வேறு இடத்திற்கு மாற்றுவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது எந்த அளவிற்கு நிதர்சனமாகும் என்பது கேள்விக்குறியே என உலகநாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |