அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு: ட்ரம்புக்கு அதிர்ச்சி கொடுத்த நெதன்யாகு
அமெரிக்காவில் (US) இருந்து உற்பத்தியாகி வரும் பொருட்களுக்கான அனைத்து இறக்குமதி வரிகளையும் ரத்து செய்ய இஸ்ரேல் (Israel) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக 2ஆவது முறையாக பதவியேற்ற ட்ரம்ப், பல நாடுகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
அதன்படி, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்பு
அந்த வகையில், பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது 100 சதவீத வரி விதிப்பை நடைமுறைப்படுத்தும் முடிவை ட்ரம்ப் அரசு எடுத்துள்ளது.
அத்துடன், இந்த வரி விதிப்புகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் அறிவிப்பு
இவ்வாறான சூழலில் ட்ரம்பின் வரி விதிப்பு முடிவிற்கு இடையே, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியா ஆகியன அமெரிக்கா மீது விதித்த வரிகளை குறைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இஸ்ரேலும் வரி ரத்து பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நிதி மந்திரி பிஜாலெல் ஸ்மோத்ரிச் மற்றும் பொருளாதார மற்றும் தொழில் துறை மந்திரியின் உத்தரவின் பேரில் அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அனைத்து சுங்க வரிகளும் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
