அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளியான கடும் எச்சரிக்கை
அரசியல் பழிவாங்கல்கள் குறித்த அரசியல்வாதிகளின் சமீத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 4000 முடிக்கப்பட்ட விசாரணை கோப்புகளை ஆணைக்குழு வைத்திருப்பதாகவும் அவை தொடர்பாக இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆணையத்தின் இயக்குநர் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அரசியல் பழிவாங்கல் குறித்த சமீபத்திய கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், அரசியல்வாதிகள் அத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு சட்டங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இல்லையெனில், சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் ரங்க திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
இதேவேளை, லஞ்சம் தொடர்பான சம்பவங்களை விசாரிக்க நாட்டின் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அதிகாரங்களை வழங்க லஞ்சம் தொடர்பான ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை அலுவலகங்களை ஆணைக்குழு நிறுவும் என்றும், அது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மக்களின் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் என்றும் இயக்குநர் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
