இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்: 50 பணய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்!
இஸ்ரேல் ஹமாஸ் போரின் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து 5 நாளான நேற்றைய தினம் (28) 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நாட்டின் சிறை துறை உறுதிப்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த ஒக்டோபர் 7-ந் திகதி ஆரம்பமாகிய நிலையில் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் போரின் போது 240 பேரை பணய கைதிகளாக பிடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு
இதனை தொடர்ந்து பல நாடுகளின் முயற்சியால் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
மேலும் பெண்கள் குழந்தைகளை விடுவிப்பதாகவும் ஹமாஸ் உறுதியளித்தது.
முதலில் 13 பேரும், பின்னர் 17 பேரும் என அடுத்தடுத்து பிணையக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
போர்நிறுத்த ஒப்பந்தம்
4 நாளில் 11 பெரும் 5 வது நாளான நேற்று 30 பெரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த 30 பேரில் 15 பெண்களும் 15 பேர் சிறுவர் சிறுமிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இருந்து 60 பெண்கள் மற்றும் குழந்தைகள் என 80ற்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
பணயக்கைதிகள்
இஸ்ரேலில் உள்ள சிறைகளில் இருந்து 180 க்கும் கூடுதலானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
5 நாள் போர் நிறுத்தம் நேற்றோடு முடிவிற்கு வந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |