மாயமாகிய இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு
கடந்த 17 நாட்களாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதலில் மக்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு மாயமான இளம் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளம் பெண், தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் படுகொலை செய்யப்பட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக
இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட நாள் அன்று 16 வயதான Noiya Sharabi மற்றும் அவரது 13 வயது சகோதரி Yahel ஆகியோர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில் இவர்களது தாயார் Lianne (வயது 48) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமி Yahel கொலை செய்யப்பட்டதாகவும் சிறுமி Noiya மாயமாகியுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிறுமி Noiya சடலத்தை அவரது குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
10 வது பிரித்தானியர்
இவர்களது தந்தை ஏலி(வயது 51 ) தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் இல்லை.
ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட 10 வது பிரித்தானியர் Noiya என்பது குறிப்பிடத்தக்கது.