ஹிஸ்புல்லாஹ் படைக்கு பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ''லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இராணுவப் படை தவறிழைக்க கூடாது''என கடுமையாக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 16 நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் பாதிப்படைந்தும் உள்ளனர்.
மேலும் 200 கும் மேற்பட்டோரை ஹமாஸ் பணயக்கைதிகளாகவும் சிறை வைத்துள்ளது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருவது 3 ஆம் உலக போருக்கான தொடக்கமாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.
ஹிஸ்புல்லாஹ்
இந்நிலையில் லெபனான் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருவதாக கூறப்படும் நிலையில் ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக பயங்கரமான இராணுவப் படையான ஹிஸ்புல்லாஹ் களமிறங்கலாம் என ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து '' ஹமாஸ் படைகளுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால் அது வாழ்நாள் தவறாக இருக்கும் ''என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை வழங்கியுள்ளார்.
இதனை லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய ராணுவத்தினரிடம் பேசும்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும்''ஹிஸ்புல்லாஹ் களமிறங்கினால், லெபனான் மீது இஸ்ரேலின் பதிலடி உக்கிரமாக இருக்கும் எனவும், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவாக இருக்கும் '' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நெதன்யாகு பயப்படுகிறாரா
ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ,குறித்தவிவகாரத்தில் நெதன்யாகு பயப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லெபனானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் படையை பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டு தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.