ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகள்: இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்த ஜஸ்டின் ட்ரூடோ
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய போது, இந்த விடயம் குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
காசா பகுதியில் சிக்கியுள்ள கனேடிய மக்கள் மிக விரைவாக வெளியேற முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இவ் விவாதம் நடைபெற்றுள்ளது.
கோரிக்கை
பின்னர், இன்று(5) தனது எக்ஸ் பக்கத்தில் “நெதன்யாகுவுடன் பேசினேன். சர்வதேச சட்டத்தின்படி, இஸ்ரேலுக்கான கனடாவின் ஆதரவையும், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையையும் நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்.
ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்” என ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
Je me suis entretenu avec @Netanyahu aujourd’hui. J’ai réaffirmé l’appui du Canada envers Israël et son droit de se défendre, conformément au droit international. Nous avons aussi réclamé la libération immédiate et sans condition des otages détenus par le Hamas.
— Justin Trudeau (@JustinTrudeau) November 5, 2023