இஸ்ரேலின் தாக்குதல் படுதோல்வியடையலாம்: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடைய கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இஸ்ரேலுக்கும் - ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளை, தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
விரிவான சுரங்கங்கள்
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் தரை வழி தாக்குதல் தோல்வி அடைய கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மக்கள் அடர்த்தி நிறைந்த அந்த பகுதியில், சுரங்கங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. தரை பகுதி வழியேயான இஸ்ரேலின் தாக்குதல் சவாலான ஒன்றாக இருக்கும்.
ஏனெனில், ஹமாஸ் அமைப்பு தரைக்கு அடியில் விரிவான சுரங்கங்களை அமைத்து உள்ளது. இதனால், இஸ்ரேல் தோல்வியடைய கூடும் என நிபுணர்கள் பலர் எச்சரித்து உள்ளனர்.