காசாவை ஆக்கிரமித்தது இஸ்ரேல் அல்ல எகிப்து
பலஸ்தீன மக்களை நெருக்குவது இஸ்ரேல் மாத்திரம் அல்ல - மாறாக அரபு தேசங்களும் தான்.
இஸ்ரேல் குண்டு வீசி பலஸ்தீனர்களைக் கொல்கின்றது என்றால், அரபு தேசங்களோ குண்டு வீச்சுக் களத்துக்குள் பலஸ்தீன மக்களை வாழ நிர்ப்பந்தித்து கொல்கின்றது.
இஸ்ரேல் பலஸ்தீன மக்களை ஓட ஓட விரட்டுகின்றது என்றால், அரபு உலகமோ அந்த மக்களை ஓட அனுமதிக்காமல் தடுத்து மிரட்டுகின்றது.
இந்த இரண்டு தரப்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், பலஸ்தீனர்களை இஸ்ரேல் தமது எதிரிகள் என்று கூறிக்கொண்டு சாகடிக்கிறார்கள். ஆனால் அரபு தேசங்களோ அவர்களை தமது சகோதரர்கள் என்று கூறிக்கொண்டு சாகடிக்கிறார்கள்.
இஸ்ரேலினால் மிரட்டப்படுகின்ற பலஸ்தீன அகதிகளை அயலில் உள்ள அரபு நாடுகள் ஏற்காது புறம் தள்ளுவது ஏன்?
எதற்காக காசாவில் உள்ள பலஸ்தீன மக்களை அயலில் உள்ள அரபு நாடுகள் தங்களுடைய நிலப்பரப்புக்குள் ஏற்பதில்லை?
இன்று காசாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள யுத்தம் காரணமாக உயிரை கைகளில் பிடித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்ற அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு காசாவின் தெற்கு எல்லையில் இருக்கின்ற எகிப்து ஏன் அபயம் அளிக்கவில்லை?
இவை போன்ற பல கேள்விகளுக்கு பதிலாய் வருகிறது இன்றைய உண்மையில் தரிசனம் நிகழ்ச்சி,