ஈரான் எல்லையில் அமெரிக்க அர்மடா...! ட்ரம்பின் நேரடி உத்தரவால் அதிரும் மத்திய கிழக்கு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழத் தொடங்கியுள்ள நிலையில், ஈரானின் எல்லைகளைக் குறிவைத்து அமெரிக்காவின் பாரிய அர்மடா கடற்படைப் பிரிவு நிலைநிறுத்தப்பட்டிருப்பது உலக நாடுகளியே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி உத்தரவின் பேரில், யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானந்தாங்கி கப்பல் தலைமையிலான பாரிய போர்க்கப்பல் தொகுதி அரேபியக் கடல் மற்றும் ஓமான் வளைகுடாப் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளமை, ஈரானுக்கு எதிரான ஒரு நேரடி இராணுவ நடவடிக்கையின் ஆரம்பமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, செங்கடல் பகுதியில் அடையாளம் தெரியாத மர்மக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள், சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் ஒரு பாதிப்பை முன்னறிவிக்கும் சமிக்ஞைகளாகவே பார்க்கப்படுகின்றன.
ஈரானுக்குள் அமெரிக்காவின் விசேட அதிரடிப்படைத் துருப்புகள் நுழையக்கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில், ஈரானின் புரட்சிகர இராணுவப் படை விடுத்துள்ள எச்சரிக்கை, மோதலை ஒரு முழு அளவிலான போரை நோக்கித் தள்ளியுள்ளது.
ஒருபுறம் ஈரான் உள்நாட்டில் கடும் போராட்டங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவின் இந்த அதிரடி இராணுவப் பலப்பரீட்சை - ஈரானின் அணுசக்தி மையங்களைச் சிதைக்கவா ? அல்லது பிராந்திய ரீதியான அதிகார மாற்றத்தை ஏற்படுத்தவா ?
ஈரானைச் சுற்றி வளைக்கும் அமெரிக்காவின் வியூகம், செங்கடலில் உலவும் அந்த மர்மக் கப்பல்களின் பின்னணி மற்றும் மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்தகட்ட அரசியல் நிலநடுக்கங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்