கொழும்பு தமிழ் பாதாள உலகத் தலைவர்களின் பிள்ளைகள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்
கொழும்பு தமிழ் பாதாள உலகத் தலைவர்கள் குடு செல்லி மற்றும் பழனி கணேஷ் ஆகியோரின் இரண்டு மகன்களான பழனி ரிமோஷன் மற்றும் பழனி கனிஸ்டன் ஆகியோர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள திருச்சி திறந்தவெளி சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும், கடந்த காலங்களில் கொட்டஹேனா மற்றும் ஜிந்துபிட்டி பகுதிகளில் நடந்த பல கொடிய துப்பாக்கிச் சூடுகளுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருச்சி திறந்தவெளி சிறை
அவர்களது மற்றொரு சகோதரர் பழனி சிரானும் தற்போது அதே சிறை முகாமில் உள்ளார், மேலும் இந்திய அதிகாரிகள் விரைவில் அவரை இலங்கையிடம் ஒப்படைப்பார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டுள்ள இந்தக் குழுவிற்கு பயங்கரவாத அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக இந்திய பாதுகாப்புப் படையினர் தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
உன்னிப்பாக கண்காணிப்பு
போதைப்பொருள் வலையமைப்பு மூலம் பெறப்படும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்ற ஆபத்து இருப்பதால், இலங்கை பாதுகாப்புப் படையினரும் இந்த நபர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு வந்ததும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு சிறப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்