அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம்
அமெரிக்காவின் மத்திய கிழக்கு மீதான நகர்வுக்கு மத்தியில் மத்தியில் தெற்கு ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு ஈரானிய துறைமுகமான பந்தர் அப்பாஸில் இன்று (31.01.2026) குறித்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த வெடிவிபத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், 14 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம்
உள்ளூர் தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் அஹ்வாஸில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவும் எரிவாயுவால் ஏற்பட்டது என்றும் மேலும் இந்த வெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
எனினும் இரண்டு தாக்குதல்களிலும் இஸ்ரேல் ஈடுபடுவதை மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்