தென் பகுதி ஹமாஸை முற்றிலுமாக அழித்த இஸ்ரேல்: தூதுவர் பகிரங்க தகவல்..!
இஸ்ரேலின் தெற்கு பகுதியிலுள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அனைவரையும் அழித்துவிட்டதாக இந்தியா மற்றும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் கொடூரமானது என்றும் தங்கள் கிராமம் ஒன்றில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த நூறு பேருக்கு இறுதிச்சடங்கு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தூதுவரின் பதில் கேள்வி
இந்நிலையில், காசா மீதான இஸ்ரேலின் கொடூர பதில் தாக்குதல்களின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதா என அவரிடம் கேள்வி எழுந்த போது காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதே, அப்போது 40 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டார்களே, அப்போது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டதா என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, காசாவில் இருந்து எகிப்து செல்ல ஒரே வழியான ரபா எல்லைப் பகுதியை திறப்பதற்கு அனுமதி வழங்கபட்டதாகவும் தற்காலிமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், ஹமாஸிற்கு எதிரான போரில் இதுவரை போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.