இஸ்ரேல்..ஹமாஸ்.. உலகத் தமிழரின் ஆதரவு யாருக்கு...!
காசாவை மையப்படுத்தி வெகுவிரைவில் மிகப்பெரும் யுத்தம் ஆரம்பமாகலாம் என்றும் அந்த யுத்தம் இஸ்ரேல் எல்லைகளை தாண்டியும் விரிவடையலாம் என்றும் கூறப்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக ஒரு முக்கியமான கேள்வி உலக தமிழர்கள் மத்தியில் எழுப்பட்டுவருகின்றது.
உலக தமிழர்கள் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவா அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவாகவா நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்ற கேள்வி தற்போது பரவலாக்கப்பட்டு வருகின்றது.
பலஸ்தீனர்கள் ஒரு போராடுகின்ற இனம் என்ற ரீதியிலும் பலத்த இடர்பாடுகளின் மத்தியில் விடுதலை வேண்டி பயணிக்கின்ற சமூக கூட்டமென்ற வகையிலும் மற்றோரு போராடும் இனமான ஈழத்தமிழர்கள் பலஸ்தீனர்களின் பக்கமே நிற்கவேண்டும் என்பது உலக தமிழர்கள் தரப்பின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது.
இந்த நிலையில், ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு இஸ்ரேல் பக்கமே இருக்கவேண்டும் என்றும் ஒரு சில தரப்புகள் கூறிவருகின்றன.
இவ்வாறான சூழலில் இஸ்ரேல் பலஸ்தீன் போரில் ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு எத்தகையது என்றும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பல யதார்த்தங்களை எடுத்து வருகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி