பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: சர்வதேச ஒலிம்பிக்குழு
காஸா யுத்தம் காரணமாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை என சர்வதேச ஒலிம்பிக்குழு தெரிவித்துள்ளது.
உக்ரேன் யுத்தத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் அவ்விரு நாடுகளின் சார்பாக போட்டிகளில் பங்குபற்றுவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் அவர்கள் நடுநிலை போட்டியாளர்களாகவே பங்குபற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்கும் ஒலிம்பிக்கில் தடை விதிக்குமாறு பலஸ்தீன செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரான்ஸின் இடதுசாரி அமைச்சர்கள் சிலரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டி
இந்நிலையில், கடந்தவாரம் பாரிஸுக்கு 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் இணைப்பு குழுவின் தலைவர் பியர் ஒலிவியே பெக்கர்ஸ் வியூஜன்ட்டிடம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன் போது அவரிடம் காஸா யுத்தம் காரணமாக இஸ்ரேலுக்குத் தடை விதிக்கப்படுமா என கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், இஸ்ரேலுக்கு தடைவிதிக்கப்படுவதற்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியூஜன்ட்டிடம் மேலும் தெரிவிக்கையில், 'ஆரம்பத்தில் ரஷ்யாவுக்கும் பின்னர் ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் தனித்துவமானைவை.
காஸா யுத்தம்
மேலும் ரஷ்யாவும் மற்றும் ரஷ்ய ஒலிம்பிக் குழுவும் ஒலிம்பிக் சாசனத்தின் அத்தியாவசியமான பகுதிகளை பலவீனப்படுத்திய நிலையில் பலஸ்தீன ஒலிம்பிக் குழு அல்லது இஸ்ரேலிய குழு விடயத்தில் இந்நிலைமை இல்லை அத்தோடு அவை அமைதியாக ஒதுங்கியுள்ளன.
அத்தோடு 2022 ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து நான்கு நாட்களின் பின், அதாவது 2022 குளிர்கால பராலிம்பிக் ஆரம்பமாகுவதற்கு ஒன்பது நாட்களுக்கு முன் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது.
இதனால் ஒலிம்பிக் கால போர் நிறுத்தத்தை ரஷ்யா மீறிவிட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களைச் சேர்ந்த பிராந்திய விளையாட்டு அமைப்புகளையும் அங்கத்தவர்களாக ரஷ்ய ஒலிம்பிக்குழு உள்ளடக்கியதையடுத்து, ரஷ்ய ஒலிம்பிக் குழுவுக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த ஒக்டோபர் மாதம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |