இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் நீடிப்பு : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளதாக ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் "ஒரு சிறந்த சந்திப்பு" என்று பாராட்டிய ட்ரம்ப், இரு நாடுகளின் தலைவர்களையும் விரைவில் வெள்ளை மாளிகைக்கு வரவேற்பேன் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
முதல் போர் நிறுத்தம்
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட முதலாவது போர் நிறுத்தம், பத்து நாட்களுக்குப் பிறகு காலாவதியாகவிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான மத்தியஸ்தத்தில் ட்ரம்பின் ஈடுபாடு, போர் நிறுத்தத்தை நீடிக்க "சாத்தியமாக்கியது" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறியதுடன் அமைதிக்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளும் ஹிஸ்புல்லாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய ரூபியோ, "லெபனான் மக்கள் அமைதியான மற்றும் செழிப்பான ஒரு நாட்டில் வாழத் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |