தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!
தெற்கு லெபனானில் தற்போதுள்ள பாதுகாப்பு மண்டலத்தை (Buffer Zone) மேலும் விரிவுபடுத்துமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்குப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாஃபெட்டில் (Safed) உள்ள இராணுவத்தின் வடக்கு கட்டளைத் தலைமையகத்திலிருந்து வெளியிட்ட காணொளி அறிக்கையில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் நிலவும் பாதுகாப்புச் சூழலை அடிப்படையாக மாற்றியமைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு மண்டலம்
இதனடிப்படையில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த இப்போதுதான் உத்தரவிட்டேன் என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இப்பிராந்தியத்தில் தரைவழி ஊடுருவலை மேற்கொண்டு வரும் இஸ்ரேலியப் படைகள், ஏற்கனவே அங்கிருக்கும் வீடுகள் மற்றும் உட்கட்டமைப்புகளைத் தகர்த்து வருவதுடன் பொதுமக்களைக் கட்டாயமாக வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளன.
லெபனானுடனான வடக்கு எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்துவதே இந்த நகர்வின் நோக்கம் என்று கூறப்பட்டாலும் இந்த எல்லை தாண்டிய மோதல்கள் மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான பிராந்தியப் போராக (Regional War) வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தைச் சர்வதேச சமூகத்திடையே ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |