இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் இலங்கையர் ஒருவர் பாதிப்பு!
Sri Lanka
Israel
Palestine
By Shadhu Shanker
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்குமிடையிலான பாரிய மோதலினால் இரு தரப்புக்கும் இடையில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை குறித்து வெளிவிவகார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.
மேலும்,குறித்த வன்முறை நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறும் இலங்கை கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மிக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.
கட்அவுட் அரசியலுக்கு நான் எப்போதும் எதிரானவன்: என் புகைப்படங்களை பயன்படுத்தாதீர் என்கிறார் ரணில் (படங்கள்)
இலங்கையருக்கு
குறித்த மோதல் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மோதல்களில் இதுவரையிலும் ஒரு இலங்கையர் மாத்திரமே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி