அல்-அக்ஸா ஒபரேஷன்! 20 நிமிடங்களில் 5000 ஏவுகணைகள் : பயங்கரவாதிகளிடம் வீழ்ந்துவிட்டதா இஸ்ரேல்...
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஒபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது இன்று அதிகாலை கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவித் தாக்குதல் நடத்தினர்.
இதில் சுமார் 150 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும், 1104 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதில் தாக்குதல்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பரசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக Operation Iron Swords என்ற பெயரில் வான் மற்றும் முழுவீச்சு தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையே இடைவிடாத சண்டை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலஸ்தீனியர்களின் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 150 ஏவுகணைகள் சீறிப்பாய தொடங்கியுள்ளது.
இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Dozens of missiles launched from the #GazaStrip are flying toward #TelAviv. pic.twitter.com/7lteQJZ1b2
— NEXTA (@nexta_tv) October 7, 2023
இருநாடுகளுக்கு இடையிலான இந்தப் போர் நடவடிக்கையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலிய பகுதிகளுக்குள் புகுந்து அங்குள்ள பெண்களை பிணைக் கைதிகளாக கடத்தி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.