இஸ்ரேலை அழிக்க ஈரானின் அடுத்த திட்டம்! எச்சரிக்கை விடுத்த நெதன்யாகு
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலை அழிப்பதற்காக கட்டமாகக் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்க ஈரான் முயல்கிறது என இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகின.
இந்த தாக்குதலால் ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை உற்பத்தித் திறன்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அணு ஆயுத கையிருப்பு
அதேநேரம் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயன்று வருகின்றது. எனினும், அதை எங்கள் தாக்குதல் தடுக்கவில்லை.
ஈரான் பல அணு குண்டுகளை உருவாக்கி கையிருப்பில் வைத்துக் கொள்ள முயல்கிறது.
ஏற்கனவே ஈரான் வசம் நீண்ட தூரச் சென்று தாக்கும் ஏவுகணைகளும் கையிருப்பில் உள்ளன."என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |