காசாவில் கடும் மோதல்! வீதியை இடைமறித்த கவச வாகனங்கள் : மக்கள் மீதும் தாக்குதல் (காணொளி)

Palestine Israel-Hamas War Gaza
By Vanan Oct 30, 2023 11:45 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு

இஸ்ரேலியத் துருப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் தமது தரைப்படை நகர்வை விரிவுபடுத்திய நிலையில், தற்போது வடக்கு காசாவுக்கும் தெற்கு காசாவுக்கும் இடையிலான ஒரு முக்கிய வீதியை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் இடைமறித்துள்ளன.

இந்த வீதி இடைமறிப்புச் செய்ததன் காரணமாக இந்த வீதியூடான பலஸ்தீன மக்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்;டுள்ளது

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு காசாவில் தற்பொழுது தமது துருப்புகள் நிலைகொண்டுள்ள இடங்களின் விபரங்கை வெளியிட மறுத்த போதிலும், காசாவின் முக்கிய பாதையை இஸ்ரேலிய போர்தாங்கிகள் அடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புதிய தாக்குதல்கள்

இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் தற்போது காசா நகரின் புறநகர்ப் பகுதியில் இருப்பதாகவும், வடக்கிலிருந்து தெற்கே செல்லும் ஒரு முக்கிய வீதியை அவை இடைமறித்து நிற்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

காசாவில் கடும் மோதல்! வீதியை இடைமறித்த கவச வாகனங்கள் : மக்கள் மீதும் தாக்குதல் (காணொளி) | Israel Pounds Gazas North Steps Up Ground Assault

காசாவில் கடும் மோதல்! வீதியை இடைமறித்த கவச வாகனங்கள் : மக்கள் மீதும் தாக்குதல் (காணொளி) | Israel Pounds Gazas North Steps Up Ground Assault

காசாவில் கடும் மோதல்! வீதியை இடைமறித்த கவச வாகனங்கள் : மக்கள் மீதும் தாக்குதல் (காணொளி) | Israel Pounds Gazas North Steps Up Ground Assault

தற்போது காசா பகுதிக்குள் கவச வாகன அணியுடன் கூடிய காலாட்படை தமது தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாகவும்,  தரைவழித்தாக்குதல்களை நடத்துவதற்கு உதவும் வகையில் இராணுவத்தின் பொறியியல் பிரிவுகளும் காசாவிற்கு அனுப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணும் குறிப்பிட்டுள்ளது

இந்த நிலையில் சலா-அல்-தின் வீதியை இஸ்ரேலிய போர்த்தாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் குறுக்கறுத்து நிற்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை மக்கள் அனுப்பி வருகின்றனர்.

குhசாவின் வடக்கில் உள்ள பாலஸ்தீன மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தெற்கே வெளியேற இஸ்ரேலால் கூறப்பட்ட இரண்டு வழிகளில் சலா-அல்-தின் வீதியும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இன்று காலையும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பல உந்துகணைகள் ஏவப்பட்டன.

இஸ்ரேலிய இராணுவம் காசா மீது மூன்று வாரங்களுக்கும் மேலாக தீவிரமான குண்டுவீச்சுக்களை நடத்திய போதிலும், ஹமாஸ் இன்னும் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது உந்துகணைகளை ஏவும் திறனைக் கொண்டிருப்பதை இந்த புதிய தாக்குதல்கள் நிரூபித்துள்ளன.

இஸ்ரேலை நோக்கி உந்துகணைகளை ஏவும் ஹமாசின் உட்கட்டமைப்பை அழிப்பது காசா மீதான தனது இராணுவ நடவடிக்கையின் முன்னுரிமைகளில் ஒன்றென இஸ்ரேலிய இராணுவம் கூறியிருப்பது சுட்டிக்காட்த்தக்கது. 

காசாவில் ஒரு கார் இஸ்ரேலிய படைகளால் தாக்கப்படுவதைக் காணலாம்.


முதலாம் இணைப்பு

காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் துருப்புகள் இன்று (30) கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதுவரை 20 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் படைகள் கவச வாகனங்களுடன் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் நவம்பர் 20 இல் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் நவம்பர் 20 இல் ஆரம்பம்

காசாவின் ஷிஃபா (Shifa), ஆல்-கூட்ஸ் (Al-Quds) மருத்துவமனைகளுக்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காசாவில் கடும் மோதல்! வீதியை இடைமறித்த கவச வாகனங்கள் : மக்கள் மீதும் தாக்குதல் (காணொளி) | Israel Pounds Gazas North Steps Up Ground Assault

காசாவின் வடக்கு பகுதியில், கடுமையான மோதல்கள் நடந்து வரும் நிலையில், காசா மக்கள் அவசரமாக வடக்கில் இருந்து தெற்கை நோக்கி உடனே செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.

இதேவேளை, காசாவில் இஸ்ரேல் படைகளுடன் நடந்த மோதலில் 20 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, காசாவில் 600 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.    

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்